கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
ஆவியினால் ஆண்டவனை
அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
மனங்களில் அமைதி வென்றாளும்
மனிதரில் பாசம் உண்டாகும்

1. கிருபையினால் மா தேவன் .. இரக்கம்
பெற்றாள் பணிந்ததினால்
மகிமையின் கர்த்தனிடம்
வலிமையின் தேவனிடம்
பலவான்கள் தலைகுனியும் ..இனி
கனவான்கள் கைவிரியும் – விண்ணுலகம்

2. தெய்வத்தின் நல்விருப்பம் – என்றும்
தெய்வமகன் விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க வந்தார்
பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல
சாத்தானை ஜெயிக்க வந்தார் – விண்ணுலகம்

3. மானுட அவதாரம் – ஒன்றே
ஆண்டவரின் திரு விருப்பம்
தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
பசித்தவர் விருந்துண்பார்
புதியதோர் சமுதாயம் .. இனி
மலர்ந்திடும் அவனியெங்கும் – விண்ணுலகம்



kanniththay mariyal varaverral theyvamakan
sibbiyaval porkutaththil muththenave avadhariththar
aaviyinal aandavanai
aval sumakkak koduththu vaiththal!

vinnulakam makizhnththu panbadum
mannulakam viyanththu kondadum
manangkalil amaithi vendralum
manidharil pasam undakum

1. kirubaiyinal ma thevan .. irakkam
perral paninthdhathinal
makimaiyin karthdhanitam
valimaiyin thevanitam
palavankal dhalaikuniyum ..ini
kanavankal kaiviriyum – vinnulakam

2. theyvaththin nalvirubpam – enrum
theyvamakan virumbum apam
jeevanin athipathithan
jeevanaik kodukka vanththar
pavaththaith tholaikka vanththar – valla
saththanai jayaikka vanththar – vinnulakam

3.
manuta avatharam – ondre
aandavarin thiru virupam
thazhnthdhavar uyarnththiduvar
pasithdhavar virunththunbar
puthiyathor samuthayam .. ini
malarnththidum avaniyengkum – vinnulakam